Categories
உலக செய்திகள்

அடித்த ஜாக்பாட்…. 10 ஆண்டுகளுக்குப் பின் வந்த மகாலட்சுமி…. பிரபல நாட்டில் “ஒருவருக்கு லாட்டரியில் 248.42 கோடி”….!!!!

பிரபல நாட்டில் ஒருவருக்கு பல கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் பரிசாக கிடைத்துள்ளது.

சீன நாட்டில் உள்ள குவாங்சி  ஜீவாங்  பகுதியில் லீ என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார்.  தற்போது  அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசியுள்ளது. அதில் அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் இந்திய மதிப்பில் 248.42 கோடி அளவுக்கு பரிசு தொகை கிடைத்துள்ளது. இதனால் லீ  மகிழ்ச்சியில் உறைந்து போய்யுள்ளார். கடந்த 22-ஆம் தேதி பரிசு தொகையை அள்ளி கொண்டு வந்துள்ளார். மேலும் அவர் தனக்கு கிடைத்த பரிசு தொகையில் 5.5 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்து  இருக்கிறார்.

மேலும் பரிசு தொகையை பெறுவதற்கு வழக்கம் போல் செல்லாமல் சிறுவர்கள் முதல் பலரும் விரும்பி பார்க்கக்கூடிய கார்ட்டூன் கதாபாத்திரம் ஒன்றின் வேடம் அணிந்து கொண்டு சென்று பணத்திற்கான காசோலையை பெற்று வந்துள்ளார். மேலும் சீனாவில் தனது அடையாளம் தெரியாமல் ரகசியமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற விஷயங்களை மக்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். இதுகுறித்து லீ கூறியதாவது. எனது மனைவி குழந்தைகளிடம் கூட இது பற்றி தெரிவிக்கவில்லை. ஏனெனில் மற்றவர்களை விட தாங்கள்  உயர்ந்தவர்கள் என அவர்கள் என்ன தொடங்கி விடுவார்கள் என நினைத்தேன். அதனால் அவர்களிடம் தெரிவிக்காமல் மறைப்பது என முடிவு செய்தேன்.

மேலும்  சட்டத்தின்படி வரி மற்றும் தொண்டு நிறுவன நன்கொடை உள்ளிட்டவை போக நான்  198 கோடியை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும்.  நான் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு  வாங்குகிறேன். ஆனால் சில ஆண்டுகளாக ஒரே மாதிரியான 7  எண்களை தேர்வு செய்து வாங்கி வருகிறேன். அந்த எண்களுக்கு உண்மையாக இருந்ததற்காக இந்த முறை பலன் கிடைத்துள்ளது. மேலும் பெரிய தொகையும் கிடைத்துள்ளது. லாட்டரி சீட்டுகளை வாங்குவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு என நினைத்துக் கொள்வேன். மேலும் குடும்பத்தினரும் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. நானும் அதிக தொகையை இதற்கு செலவிட மாட்டேன். இந்த லாட்டரி சீட்டுகள் எனக்கு நம்பிக்கையின் ஒளியை தந்துள்ளது என கூறியுள்ளார்.

Categories

Tech |