உங்கள் வீட்டில் அடி பிடிச்ச பாத்திரம் பளபளவென புதுசு மாதிரி மின்னுவதற்கு இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால் போதும். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.
நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பாத்திரம் விளக்கக்கூடிய பவுடர்கள் மற்றும் ஜெல்கள் போதுமானதாக இல்லை. இந்த கட்டுரையில் நாம் பாத்திரங்களை விளக்குவதற்கான சில டிப்ஸ்களை பார்க்கப்போகிறோம். பெரும்பாலும் எண்ணெய் மற்றும் தீ பயன்படுத்தி உருவாக்கக்கூடிய உணவுகள் அதிகம் கொண்டது. அதிலும் தொற்று நாட்களில் குடும்பத்தினரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக புதிய உணவுகளை தயாரித்து மகிழ்ந்து வந்தார்கள். இதில் என்ன பிரச்சினை என்றால் பாத்திரங்களை கழுவுவதில் நமக்கு நிறைய சவால்கள் உள்ளது. அதுவும் எண்ணெய் சார்ந்த உணவு பாத்திரங்களை சமைக்கும்போது அந்தக் கரைபோகவே போகாது.
எனவே எண்ணெயில் சமைத்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். தண்ணீரின் வெப்பத்தின் காரணமாக பாத்திரத்தில் நீக்க முடியாத உணவுத்துகள்கள். எண்ணெய் பிசுக்குகள் எளிதாக வந்துவிடும். பின்னர் ஸ்க்ரப் பயன்படுத்தி தேய்த்து கழுவி விட்டால் பாத்திரம் சுத்தமாகி விடும். அடுத்து உப்பு அழுக்கான பாத்திரங்களை சுத்தப்படுத்த உதவுவது உப்பு. உப்பு அல்லது சோடியம் குளோரைடு போன்றவற்றை பயன்படுத்தி தேய்ப்பதன் மூலம் பாத்திரத்தை விரைவில் சுத்தப்படுத்த முடியும். இது நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஜெல் மற்றும் பவுடர்களை விடவும் சிறந்தது. அழுக்கு நிறைந்த பாத்திரங்களை தேய்ப்பதற்கு நீங்கள் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை பயன்படுத்தி அழுக்கு நிறைந்த பாத்திரங்களை நன்றாக தேய்க்கும் பொழுது சில நிமிடங்களில் பாத்திரம் பளபளவென ஆகிவிடும்
உங்களது பாத்திரத்தை டொமேடோ கெட்சப் சூப்பராக சுத்தப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? அழுக்கான பாத்திரங்களை 10 அல்லது 20 நிமிடங்கள் டொமேடோ கெட்சப்பில் ஊறவைத்து தேய்த்தால் பாத்திரம் பளிச் என்று ஆகிவிடும். அதையடுத்து எழுமிச்சைபழம் கொதிக்க வைக்கப்பட்ட எலுமிச்சையை பயன்படுத்தி பாத்திரங்களை கழுவ முடியும். சுட வைக்கப்பட்ட எலுமிச்சையை பாத்திரங்களில் நன்றாக தேய்த்து சில நேரங்களுக்கு ஊற வைப்பதன் மூலம் பாத்திரத்தில் உள்ள அழுக்கு விரைவில் சென்றுவிடும்.