Categories
மாநில செய்திகள்

“அடிப்படை அறிவு கூட இல்லையா”…. அண்ணாமலை வைத்து என்ன செய்றது….. டிடிஆர் ரீ-ட்வீட்…!!

தமிழகத்தில் பிரதான கட்சி எதிர்க் கட்சியான அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் சிஎம் வேட்பாளர் யார் என்ற விவகாரத்திலிருந்து ஒற்றை தலைமை யார் வசம் செல்லும் என்பது வரை கட்சிக்குள் உரிமைப் போர் நடந்து வர, அண்ணாமலை நடுவில் நுழைந்து எதிர்க்கட்சியாகவே பாஜகவை முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிறார். அரசியலில் அனுபவமில்லாத அண்ணாமலை சில நேரங்களில் சம்பந்தமே இல்லாமல் வார்த்தைகளை உபயோகப்படுத்தி விமர்சனத்தில் சிக்கிக்கொள்கிறார். அண்மையில் திமுக எங்களுக்கு 360டிகிரி எதிரி என்று ஜியோமெட்ரிக் படி எதையோ கூறியது விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் அண்ணாமலை போட்டுள்ள வேறொரு ட்வீட்டை விமர்சித்து வருகின்றனர். அந்த ட்விட்டரில், “திருமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கருணைமிகு வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில், புதிதாக வேலூர் மாவட்டம் ஆரணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவரால் எழுப்பப்பட்டுள்ளது” உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் ஆரணி இருப்பது திருவண்ணாமலை மாவட்டம் அடிப்படை அறிவுகூட இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரீ-ட்வீட் செய்து 360 டிகிரி என்று கிண்டலாக விமர்சித்துள்ளார்.

Categories

Tech |