Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அடிப்படை பயிற்சி முகாம்…. வரவு செலவு திட்டங்கள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாமை சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.  

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனரான ராஜசேகர் முன்னிலை வகித்துள்ளார். மேலும் நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியம் 85 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு 2 நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள், உறுப்பினர்கள், ஆணையர்கள் ஆகியோர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பயிற்சி அளித்துள்ளார். மேலும் ஊராட்சி ஒன்றிய மன்றத்தின் வரவு, செலவு திட்டங்கள் மற்றும் நிதி நிர்வாகம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் இணைந்து சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட பயிற்சி மைய தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |