ஆதிவாசி கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே செவிடன்கொல்லி, புதுச்சேரி, அயினிப்புறா, நெல்லிப்புறா, தோட்டப்புறா, முள்ளன்வயல் போன்ற கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வேண்டி மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையிலான ஒரு குழு ஆதிவாசி கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என மக்களுக்கு உறுதி அளித்தனர்.