Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

” அடிப்படை வசதிகள் வேண்டும் ” மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள குண்ணபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 238 சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திடீரென பள்ளிக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தாளவாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது  மாணவர்கள் தங்கள் பள்ளியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை எனவும், வகுப்பறையில் கூடுதல் இருக்கைகள் இல்லை எனவும், கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லை என பல கோரிக்கைகளை கூறியுள்ளனர். அதற்கு அதிகாரிகள் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளனர். அதன்பிறகு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |