Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டும்… வீர இந்து அமைப்பினர் கோரிக்கை… ஆர்பட்டத்தால் பரபரப்பு…!!

கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி வீர இந்து பேரமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேட்டு பகுதியில் வீர இந்து பேரமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீரப்பாண்டி பகுதியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வந்து செல்வதற்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் தெப்பகுளம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுபியுள்ளனர்.

Categories

Tech |