Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டும்… மாணவர் சங்கத்தினர் கோரிக்கை… ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்…!!

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை போன்றவைகளை செய்து தர வேண்டும், ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசு மாணவர் விடுதியிலும் தரத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவர் பிரேம் குமார் மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |