அடிப்படை வசதிகள் செய்து தரகோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதிகளான தெரு மின்விளக்கு, குடிநீர், மோட்டார் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எம்.புதுப்பட்டி -எரிச்சந்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.