Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதியும் இல்லை… பொதுமக்கள் அவதி… ஊராட்சி அலுவலகம் முற்றுகை…!!

குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள மாடகாசம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள் நீண்ட காலமாக கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக குடிநீர் உள்ளிட்ட அடிப்பட வசதிகளும் சரியாக செய்யப்படவில்லை. இந்நிலையில் மாடகாசம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் சங்கீத தலைமையில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர் சுமதி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அந்தந்த பகுதிகளில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்த பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |