Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி செய்து கேட்ட மக்கள்…. 10 வருடமா அதிமுக செய்யல…. இப்போ திமுக செய்யுது – எம்பி கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கீதாபட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் போன்றோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்களுடைய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு எம்.பி கனிமொழி கட்டாயமாக உங்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எந்த அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு செய்யவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களே ஆன நிலையில் முதலமைச்சர் படிப்படியாக பல நலத்திட்டங்களை செய்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |