சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சில தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அதாவது,
1.மதவாதம் நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடமிருந்த தமிழகத்தை காப்போம்.
2.தேசவிரோதிகளுக்கு துணைபோகும் அடிமைகள் விலைபோகும் வீணர்களை அடையாளம் காட்டவேண்டும்.
3. தமிழ்நாட்டை எந்தத் சேதாரமின்றி காக்க பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.