Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமையா வாழ்ந்து பழகிட்டாங்க….. “ரத்தத்தில் ஊறிய ஒன்று”….. அனைவரும் அறிந்ததே!…. மனோ தங்கராஜ் ட்விட்..!!

அடிமையாக இருக்கும் வழக்கம், அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று என அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுகவை விமர்சித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதிமுக உறுப்பினரை அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக பேசியதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட் செய்துள்ளார். அதில், மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்து இருப்பது இன்னும் நாங்கள் சுயமாக யோசிக்கும் அறிவை பெறவில்லை என சொல்வது போல் உள்ளது.

சுயமரியாதை சுயாட்சி கொள்கைகளுக்கு அர்த்தமே தெரியாமல் அடிமையாய் வாழ்ந்து பழகியவர்கள் அண்ணாவின் பெயரை தூக்கிவிட்டு அமித்ஷாவின் பெயரையோ அல்லது அண்ணாமலையின் பெயரையோ சேர்த்துக் கொள்வதே சரியானதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அண்ணாவின் சுயமரியாதை சுயாட்சி கொள்கைகளை மறந்து பாஜகவிற்கு அடிமையாகவே வலம் வந்து கொண்டிருக்கும் அஇஅதிமுக-வினர் வெளிநடப்பு செய்வதில் ஆச்சரியம் இல்லை! மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு அடிமையாக இருக்கும் வழக்கம் அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே! என்று பதிவிட்டுள்ளார்..

 

Categories

Tech |