Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடியாத்தி…! தலைமுறை தலைமுறையாக…. நெற்றியில் திலகமிட்டு…. பட்டு சேலை கட்டிகிட்டு….. பெண் பகீர் வாக்குமூலம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் கேளம்பாக்கம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும் திருவிழாவிற்கு வந்திருந்த எட்டு பேரிடம் நகை பறிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே நடந்திருந்தால் சில மணி நேரத்துக்கு பிறகு தான் அவர்களுடைய கழுத்தில் இருந்த செயின் மாயமாய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து எட்டு பெரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் துறை நடத்திய இந்த விசாரணையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் பட்டுப் புடவை அணிந்திருந்த பெண் ஒருவர் திருவிழா கூட்டத்திலிருந்து பெண்களின் பின்னால் நெருக்கமாக இடித்துக்கொண்டு வித்தியாசமான நடவடிக்கையில் காணப்பட்டுள்ளார். அதனை அடுத்து அவர்தான் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை பிடித்து கைது செய்த காவல்துறையினர் விசாரணை செய்தபோது அதிர்ச்சிகர உண்மை வெளியாகியுள்ளது. இவர் பெயர் பாண்டீஸ்வரி. அவருக்கு 23 வயது தான் ஆகிறது. இவரும் உறவினர்கள் 30 பேரும் சேர்ந்து தலைமுறை தலைமுறையாக திருடி வருவதாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் திருவிழா போன்ற கூட்டம் கூடும் அதிகம் பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டுவது வழக்கமாகும். இவர்கள் பார்க்க குடும்ப பெண்கள் போலவும் பணக்கார தோற்றமும் இருக்க பட்டுப்புடவை நகைகள் அணிந்து கொண்டு ஒவ்வொரு திருட்டுலும் ஈடுபடுவதாக கூறியுள்ளார். இதனால் போலீசுக்கு சந்தேகம் வராது என்று தெரிவித்துள்ளார். எனவே கூட்டத்திற்குள் புகுந்து பெண்கள் பின்னால் சென்று அவர்கள் அணிந்திருக்கும் செயினை தெரியாமல் அறுத்து எடுத்து வந்து விடுவதாக கூறியுள்ளார். போலீசார் அவரிடம் இருந்து 47 சவரன் நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருடைய உறவினர்கள் யார் யார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்? இதுவரை எத்தனை நகைகளை திருடியுள்ளனர்? என்ற விசாரணையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

Categories

Tech |