இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக வங்கி தொடர்பான சேவைகளை தொடங்கியுள்ளது. அது மட்டும் அல்லாமல் எஸ்பிஐ அப்ளிகேஷன் ப்ரோக்ராமிங் இன்டர்ஃபேஸ் சேவையை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது எஸ் பி ஐ வங்கியில் whatsapp பேங்கிங் சிஸ்டம் அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் சில வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இந்த மெசேஜில் தளத்தை பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ் அப் மூலம் பேங்கிங் சேவையை எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து WAREG A/C NO என்று டைப் செய்து 917208933148 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பவும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்டதும் 9022690226 என்ற எண்ணில் இருந்து hi என்று டைப் செய்து அனுப்பவும். இந்த மெசேஜ்க்கு ரிப்ளை வந்ததும் பேங்கிங் சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.