தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் துணிவு படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்தியை தற்போது படக்குழு அறிவித்துள்ளனர். அதன்படி டிசம்பர் 31-ஆம் மாலை 7 மணிக்கு துணிவு படத்தின் டிரைலரும், அஜித்தின் கேரக்டர் என்ன என்பதும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வீடியோ மலேசியாவில் உள்ள கோலாம்பூர் சிட்டி சென்டர் என்ற இடத்தில் இரவு 11 மணிக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதனால் உலக அளவில் ஹாலோகிராம் மூலம் வெளியிடப்பட்ட முதல் இந்திய டிரைலர் வீடியோ என்ற பெருமையை துணிவு திரைப்படத்தின் டிரைலர் வீடியோ பெருகிறது.