Categories
மாநில செய்திகள்

அடி தூள்…. தமிழகத்திலேயே சேலம் தான் முதலிடம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதாவது பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 28,99,269(95.5%) பேருக்கு முதல் தவணையும், 25,28,720(83.3%) பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் சேலத்தில் மட்டும் இதுவரை 31 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவல் குறைந்தாலும் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

Categories

Tech |