மலை கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகம் செய்யப்படும் என சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தொண்டாமுத்தூர், செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைக்கழக வளாகம் போன்ற பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி மற்றும் பெண்கள் விடுதியை தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது,
மலைவாழ் பகுதி மக்கள் வன விலங்குகளால் தாக்கப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் மலைவாழ் கிராம மக்களின் வசதிக்காக நடமாடும் ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் வசதிக்காக மலைப் பகுதிகளில் வழித்தடங்கள் சீராக அமைக்கப்படும் எனவும் கூறினார்.