சிம்புவின் வெற்றிக்கு பின்னால் அவர் தான் உள்ளார் என்று சிலம்பரசனின் நெருங்கிய நண்பரான மகத் ராகவேந்திரா கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு 105 கிலோ இருந்த தனது உடல் எடையை வெகுவாக குறைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன் பின்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் மிகவும் ஃபிட்டாக நடித்த சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.
மேலும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் அவருடைய வெற்றிக்கு பின்னால் யார் இருக்கிறார் என்ற உண்மையை சிலம்பரசனின் நெருங்கிய நண்பரான மகத் ராகவேந்திரா கூறியுள்ளார். அதாவது சிம்புவின் வெற்றிக்குப் பின்னால் அவர் தான் உள்ளார் என்று மகத் ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.