விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டீசர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இவர் 2 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் 3 விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நட்சத்திர கூட்டணிகள் இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.
அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், “நானும் ரவுடிதான்” என்ற படத்திற்கு பிறகு மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையமைத்து வெளியான மூன்று பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். மேலும் வருகிற ஏப்ரல் மாதம் 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.