அமெரிக்காவில் தன்னுடைய சுய சரிதை மூலம் புகழ்பெற்ற கருப்பின பெண்ணான மாயா ஏஞ்சலோவின் உருவம் பொறித்த நாணயம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வந்த மாயா ஏஞ்சலோ என்பவர் பெண்ணுரிமைப் போராளியும், பிரபல எழுத்தாளருமாக திகழ்ந்துள்ளார். இவர் தன்னுடைய சுயசரிதை மூலம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்துள்ளார்.
இந்த சுயசரிதையில் ஏஞ்சலோ தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவலை எழுதியுள்ளார். இவருடைய இந்த சுயசரிதை அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இவர் 86 ஆவது வயதில் கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக கருப்பின பெண்ணான மாயா ஏஞ்சலோவின் உருவம் பொறிக்கப்பட்ட கால் டாலர் மதிப்புடைய நாணயத்தை அந்நாடு வெளியிட்டுள்ளது.