Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அடி தூள்…! மாஸ்டர் வெளியிட தடை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக ணையத்தில், கேபிளில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்கில் மூடப்பட்டதால் படம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடும் போது அதை பதிவு செய்து சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவது அல்லது கேபிள் டிவியில் வெளியிடும் நடைமுறைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றது. எனவே இணையம் மற்றும் கேபிள் டிவியில் மாஸ்டர் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வன் ஸ்கிரீன் ஸ்டூடியோவின்  லலித் குமார் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக கேபிள் டிவியில் ஒளிபரப்ப கூடாது என்று தடை விதித்திருக்கிறார். மேலும் சட்ட விரோதமாக 400 இணையதளங்களிலும் மாஸ்டர் படத்தை வெளியிட நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

Categories

Tech |