தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரை போற்றும்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படம் தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றது. அதுமட்டுமில்லாமல் ஓடிடி தளத்தில் அதிகமானோர் பார்த்த பிராந்திய மொழி படம் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் வெளிவந்தது. தற்போது சூரரைப் போற்றும் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.
இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்நிலையில் மீண்டும் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும், இது உண்மை சம்பவம் கதை பற்றி என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .மேலும் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார்.