தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ் மற்றும் சரத்குமார் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கு ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது.
அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும், டப்பிங் படங்களுக்கு மீதம் உள்ள தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்படும் எனவும், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு தமிழ் பிரபலங்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது வாரிசு திரைப்படம் திட்டமிட்டபடி ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகும். மேலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அதிக தியேட்டர்களில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.