விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “அடிமுதல் நுனிவரை அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்திருப்பது பேசப்பட்ட நிலையில் தற்பொழுது அது வெளியே தெரியவந்துள்ளது. அதிமுக தலைமை இந்த சோதனை குறித்து எந்த கருத்தையும் வெளியிடவும் இல்லை, தங்களது எதிர்ப்பையும் காட்டவில்லை. அவர்கள் தங்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் போராடி இருக்கக்கூடும். தற்பொழுது திமுக அரசு எடுக்கும் நடவடிக்கை நியாயமாக உள்ளது என்பது இதிலிருந்தே அனைவருக்கும் தெரியும்.
மேலும் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது முன்னாள் அமைச்சர் வீட்டில் நடந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஜிஎஸ்டி வரிகளில் எந்தவித உடன்பாடும் இல்லை. மேலும் ஒன்றிய அரசானது ஜிஎஸ்டி தொகையான பல ஆயிரம் கோடியை மாநில அரசுக்கு செலுத்தாமல் பாக்கி வைத்து இருக்கிறது. தற்போதுள்ள அரசு எவ்வித கோரிக்கையும் நிலுவையில் வைக்காமல் உடனடியாக நிறைவேற்றி வருகிறது என்று பேசினார்.