Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து…. தப்பிப்பதற்காக ஜன்னல் வழியாக குதித்தவருக்கு நேர்ந்த விபரீதம்….!!!

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து தப்பிப்பதற்காக 19 வது மாடியில் இருந்து கீழே குதித்து அவர் உயிரிழந்தார்.

மும்பையில் உள்ள அபிக்னா பார்க் குடியிருப்பில் 60 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள 19 ஆவது மாடியில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.  இது ஒரு குடியிருப்பு கட்டிடம் என்பதால் இதனால் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனைதொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். அப்போது கட்டிடத்தின் ஜன்னல்வழியாக ஒருவர் தப்பிக்க முயற்சி செய்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அந்த நபர் கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |