Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் பற்றிய தீ…. சிக்கி தவித்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

அடுக்குமாடி கட்டிடத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி  அணைத்தனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் மூன்று மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் கப்பலில் பயணம் செய்யும் போது தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள், காட்டன் பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. 2-வது தளத்தில் ரத்த வங்கி அமைந்துள்ளது. 3-வது தளத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் கட்டிடத்தை சுற்றிலும் கரும்புகை சூழ்ந்து கொண்டதால் 3-வது மாடியில் தங்கியிருந்த உரிமையாளரின் குடும்பத்தினர்களான மூதாட்டி, குழந்தைகள் உள்பட 5 பேர் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தை சூழ்ந்திருந்த புகையை அகற்றி அவர்களை பத்திரமாக மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |