அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் ராஜாக்கூர், உச்சப்பட்டி, கரடிக்கல் உட்பட்ட பகுதிகளில் கட்டப்படுகிறது. இந்த பகுதிகளில் மொத்தம் 2024 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோன்று சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும், வறுமையில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கும் ஒதுக்கப்படும்.
இந்த வீடுகளை பெற விரும்புவோர் கணவன்-மனைவி இருவரின் ஆதார் அட்டை நகலுடன், பயனாளியின் பங்களிப்பு தொகையை செலுத்துவதற்கான சம்மத கடிதத்தை இணைத்து, ரூபாய் 10,000 முன்பணமாக கட்டுவதற்கு வங்கி வரை வரைவோலையை The executive Engineer TNUHDB, Madurai division Madurai, என்ற பெயரில் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் குடியிருப்புகளை பெற விரும்புவர்களுக்காக வருகிற ஜூலை 23-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த அலுவலகம் கேகே நகர் பகுதியில் அமைந்துள்ளது.