Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில்…. திடீரென பற்றிய தீ…. பிரபல நாட்டில் நேர்ந்த துயர சம்பவம்….!!

மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட  தீ விபத்தில்  8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள  அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள முதல் மாடியில் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் தப்பி வெளியேறியுள்ளனர். ஆனால் விடுதியில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். விடுதி ஜன்னல்களில் இரும்பு கம்பிகள் இருந்ததால், உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி தவித்தனர்.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும்  4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை  சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாஸ்கோ நகர சபையின் பாதுகாப்புக் குழுவின் தலைவர் கிரில் ஷிடோவ் கூறியதாவது, “விடுதியில் பாதுகாப்பு மீறல்கள் குறித்த அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |