பிரான்ஸ் நாட்டின் ரோல் மாகாணம் வால்க்ஸ் என் வெலின் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் காயம் அடைந்த 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் காயமடைந்த 4 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.