டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி, பழைய சீமாபுரி என்ற பகுதியில் மூன்று அடுக்கு மாடி வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீ விபத்து ஏற்பட்ட வீட்டுக்குச் சென்று விரைந்து தீயை அணைத்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே 4 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.