மத்தியபிரதேசம் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வெளியான புதிய திருப்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில் 7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.மேலும் 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இதில் கைது செய்யப்பட்ட சுபம் தீக்சித் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது காதலி மீதான கோபத்தில் அந்த கட்டிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்ததும், அந்த தீ பரவி விபத்துக்குள்ளானதும் தெரியவந்திருக்கிறது.இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக வெளியான இந்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.