சென்னை திருவான்மியூர் காலசர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு 7.30 மணி அளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைப்பதற்கு நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அதற்குள் கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். அதேசமயம் தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
Categories