Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்கு மாடியில் இருந்து கீழே விழுந்த 5மாத குழந்தை …உயிர் தப்பிய அதிசயம் …!!

சென்னையில் அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த குழந்தை சிறிய எலும்பு முறிவுடன்உயிர் தப்பியது . 

 

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மைபால் என்பவர் தன குடும்பத்தினருடன்சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார் .அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5வது தளத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் மைபாலின் மனைவி நீலம், ஜினிஷா என்ற 8மத குழந்தையுயன் தங்கியிருந்தனர் .

 

செவ்வாய் கிழமை காலை 10மணி அளவில் வீட்டின் ஹாலில் உறவினர் இருந்த போது படுக்கை அறையில் இருந்த ஜினிஷா எழுந்து மெல்ல மெல்ல தவழ்ந்து பால்கனிக்கு சென்றது .ஏற்கனவே பால்கனி தடுப்பு குழந்தைகளுக்கு ஆபத்தாக இருப்பதால் வலது பக்கம் ஒரு ஓரம் கட்டு தளர்ந்த நிலையில் இருந்திருக்கிறது .

 

பால்கனிக்கு தவழ்ந்து வந்த ஜினிஷா அதன் வழியே எட்டி பார்த்த போது அப்படியே 5வது தளத்தில்   இருந்து கீழே விழுந்தது .குழந்தை நேரடியாக கீழே விழாமல் அங்கிருந்த இருசக்கர வாகனத்தின் மேல் விழுந்தது கீழே சரிந்துள்ளது .இதை கவனித்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஓடிச்சென்று அசைவற்று  கிடந்த குழந்தையின் நெஞ்சில் கை வைத்து அழுத்தியாதல் அது வீறிட்டு அலுதுள்ளது .

 

வலியில் துடித்த குழந்தையை அடுக்குமாடி உரிமையாளர் அனுமதியுடன் அந்த டிரைவர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார் .குழந்தை சிறிய எலும்பு முறிவுடன் உயிர் தப்பியது .

Categories

Tech |