டெல்லியை சேர்ந்த பிரபல பாடகர் ஷீல் சாகர் காலமானார். அவருக்கு வயது 22. அவரது மரணம் குறித்த காரணம் இன்னும் அறியப்படவில்லை. இவரது மறைவை நண்பர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் இண்டிபெண்டன்ட் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். இவரது இசையில் வெளியான முதல் பாடலே பலரது பாரட்டுகளை பெற்றது. அவர் கடந்த ஆண்டு மட்டும் மூன்று தனிப்பாடல்களை வெளியிட்டார்.
அண்மையில் பிரபல பாடகர் கே.கே மரணமடைந்தார். அந்த துயரில் இருந்து இசை ரசிகர்கள் வெளிவரும் முன்பே இளம் வயது பாடகர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.