செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுனர் அவர்களுடைய உரையில் அரசாங்கத்தினுடைய கொள்கைத் திட்டங்கள், இந்த அரசு மிகக் குறைந்த காலத்தில் எவ்வளவு அற்புதமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது என்பதற்கான தொகுப்பாக அரசினுடைய திட்டங்களை எல்லாம் முன்மாதிரியாக எடுத்துச்சொல்லி சிறப்பான உரையாக அமைத்துள்ளது.
குறிப்பாக நம்முடைய மாநிலத்தினுடைய கல்வி வளர்ச்சியை மேலும் உறுதி செய்யக்கூடிய வகையில் ஐந்தாண்டு காலத்தில் மாநில கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்ற கூடிய கல்வி நிறுவனங்களை மிக சிறந்த அளவிலே உருவாக்குவதற்கான ஒரு பெரும் திட்டம் உருவாக்கப்படும். ஏறத்தாழ 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டு இருக்கக்கூடிய அரசு தொடக்க பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு ஸ்மார்ட் கிளாஸ் திட்டம், ஸ்மார்ட் வகுப்புகள் உருவாகக்கூடிய திட்டம் மிகப்பெரிய அளவில் செயல்படுத்தப்படும்.
6,992 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் அத்தனை பள்ளிகளிலும் புதிய கட்டிடங்கள் உருவாக்கப்படும். நம்முடைய மொழி ஆய்வகங்கள், உயர்தர தொழில்நுட்பத்தினாலான அறிவியல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் உருவாக்கபடும் என்றெல்லாம் கல்வி வளர்ச்சிக்கு தேவையான ஊக்கத்தை முன்னிறுத்தி இருக்கக்கூடிய உயர்ந்த கொள்கையாக….
மாண்புமிகு முதலமைச்சர் அறிவிப்பாக 2030ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி டாலர் உருவாக்குவதற்கூடிய அளவிற்கு ஒரு பெரிய பொருளாதார சிறப்பினை நமது நாடு, தமிழ்நாடு பெறுவதற்க்கான திட்டம் செயல்திட்டமாக உருவெடுக்கப்படும் என்பதற்காகவும், அதற்கான முன் நடவடிக்கைகளாக மெடிக்கல் டிவைசஸ் பார்க், மருந்து பொருட்கள் செய்ய கூடிய கருவிகள் செய்யக்கூடிய அந்த திட்டத்திற்க்காக தனி பூங்காக்கள்….
….. நம் இந்திய திருநாட்டிலே முதல் முறையாக தூத்துக்குடியில் பர்னிச்சர் பார்க் அதாவது அறைகலன்கள் பூங்கா உருவாக்குவதன் திட்டம் என்று பல முக்கியமான திட்டங்களை உருவாக்கி இருக்கக்கூடிய இந்த ஆளுநர் அறிக்கையில் நம்முடைய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அரசின் உடைய கொள்கை திட்டங்களாக அறிவித்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.