சுந்தர் சியின் ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக உருவாகி வரும் இப்படத்தில் அடுத்ததாக சம்யுக்தா இணைவதாக இணையதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அரண்மனை 3’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவா, ஜெய், அமிர்தா, ரைசா வில்லியம்ஸ், ஐஸ்வர்யா தத்தா, டிடி மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சம்யுக்தா சண்முகநாதன் இணைந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜையில் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையிலும் அதனைத் தொடர்ந்து ஊட்டியிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் சம்யுக்தா இந்த திரைப்படம் குறித்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “சுந்தர் சி இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படம் மிக அருமையாக இருக்க போகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக உருவாகி வரும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.