கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் ஆறு பிள்ளைகள் 9 ஆண்டுகள் இடைவெளியில் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் கேரள போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ரபிக் – சபீனா தம்பதிகளின் 4 பெண் பிள்ளைகளுக்கு 2 ஆண் பிள்ளைகளும் கடந்த 9 ஆண்டுகளில் திடீரென மரணமடைந்துள்ளனர்.
அண்மையில் பிறந்து வெறும் 93 நாட்களே ஆன இவர்களது 6-வது குழந்தை இன்று திடீரென்று மரணம் அடைந்த தகவல் வெளியானதை அடுத்து போலீசாருக்கும் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் கேரள காவல்துறை தாமாகவே முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.
மர்மமான முறையில் இறந்த 6 பிள்ளைகளுக்கும் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு முன்னரே அடக்கம் செய்துள்ளதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக வழக்கு பதிந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தங்கள் பிள்ளைகள் வலிப்பு நோயினால் தான் இறந்ததாக ரபிக் மற்றும் சபீனா தம்பதிகள் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் நாங்கள் புகார் கொடுக்கவில்லை என ரபீக்-சபீனா தம்பதிகள் போலீசாரிடம் கூறினர். இருப்பினும் காவல்துறை விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.