பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுள்ள கேள்வி தமிழக முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாயினார் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:” தமிழகத்தில் முன்னதாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் முதல்வரான பின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்?
விவசாயிகள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த முதல்வர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று களத்தில் இறங்கி பார்க்காமல், மேலோட்டமாக பார்த்துவிட்டு அதிகாரிகளை சந்தித்து சென்றால் மக்களின் துயரத்தை தெரிந்து கொள்ள முடியாது. முதல்வர் ஆவதற்கு முன்பு ஒரு கோரிக்கை? முதல்வரான பிறகு ஒரு சட்டமா?” என்கின்ற ரீதியில் அவர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த கேள்வியால் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இதற்கு சரியான பதில் யார் கூறுவது என திமுக மேலிடம் குழம்பிப்போய் உள்ளது.