Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து ஏற்ப்பட்ட நிலநடுக்கம்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. வெளியான தகவல்….!!!!!

அருணாச்சலபிரதேசத்திலுள்ள மேற்கு சியாங்கில் இன்றுகாலை 5.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி இருப்பதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள பாசரில் இருந்து 52 கிலோ மீட்டர் வட-வடமேற்கு (NNW) தொலைவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நில நடுக்கம் இந்திய நேரப்படி காலை 10.31 மணிக்கு புவி மேற்பரப்பிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நில நடுக்கம் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் சரியாக 10:59 மணியளவில் மீண்டுமாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த சூழ்நிலையில், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவாகியது. அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரையிலும் வெளியாகவில்லை.

Categories

Tech |