வடகொரியா ராக்கெட் லாஞ்சர் ஏவுகணையை சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதாற்றமான சூழல் நிலவி வருகிறது.
உலக நாடுகளின் தடைகளை மீறி வடகொரியா ராணுவம் எதிரி நாட்டின் இலக்குகள் மீது அடுத்தடுத்து ராக்கெட் ஏவுகணைகளை செலுத்தி சோதனையிட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வடகொரிய ராணுவம் ஏராளமான கனரக ஏவுகணைகளை சோதனையிட்டு வந்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதாற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தெற்கு பியோங்கன் மாகாணத்தில் வடகொரியா ராக்கெட் லாஞ்சர் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இதன் எதிரோலியாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.