Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பு – துவண்டு போன ஹிட் மேன் …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தோனி ஓய்வை அறிவித்த சிறிது நேரம் கழித்து சின்ன தல என்று வர்ணிக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தது இந்திய ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில்,  ரெய்னாவின் ஓய்வு முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. உங்களுக்கு தோன்றியதால்தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறீர்கள். சிறந்த விளையாட்டைப்   வாழ்க்கை போல் ஓய்வு வாழ்க்கையும்  அமையட்டும். நாம் அணிக்குள் வந்தது இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது, எதிர்காலத்துக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |