சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் தம்பதிகளை தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு 40 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீரகனூர் அருகிலுள்ள ராயர்பாளையம் காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். மகன் தீபனுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து முகமூடி கொள்ளையர்கள் தீபனை சரமாரியாக தாக்கி விட்டு மனைவி திவ்யாவுடன் கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த நகை, பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் அருகே உள்ள வாசுதேவன் என்பவரின் வீட்டிற்கு நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தாக்கிவிட்டு 13 சவரன் தங்க நகை, 54,0000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரகனூர் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.