தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.ஏழு வருடங்கள் பழமையான இந்த வழக்கில் விசாரணை முடிந்ததும் சமீபத்தில் சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் ராஜா மற்றும் ஐந்து பேருக்கு எதிராக குற்ற பத்திரிக்கையை ஏஜென்சி தாக்கல் செய்தது.
இந்நிலையில் இறுதி விசாரணை அறிக்கையில் ராசா 5.53 கோடி அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சொத்துக் குறிப்பு வழக்கில் அடுத்தடுத்து அரசியல் பிரபலங்கள் சிக்குவது தமிழக அரசியல் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.