ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் காய் நகர்த்துவதாக கூறப்படுகின்றது.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தன் மகள் ஐஸ்வர்யாவை விட்டு தனுஷ் பிரிந்ததால் தனுஷின் மீது ஐஸ்வர்யாவின் அம்மா லதா ரஜினிகாந்த் கோபம் அடைந்துள்ளார். லதா ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களிடம் தனுஷுக்கு திரைப்படத்திற்காக பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறி வருகிறாராம். மேலும் தயாரிப்பாளர் அன்புச்செழியன் தன் மகள் திருமண அழைப்பிதழை கொடுக்க வந்த போது லதா ரஜினிகாந்த் அவரிடம் தன் மகளின் வாழ்க்கையை நினைத்து புலம்பினார். இதைக் கேட்ட அன்புச்செழியன் கவலைபடாதீர்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினாராம்.
இதைத் தொடர்ந்து தற்போது லதா ரஜினிகாந்துக்கு தெரிந்த இயக்குனர்களை அழைத்து தனுசுடன் படங்களை பண்ண வேண்டாம் என கூறி வருகின்றாராம். லதா ரஜினிகாந்த் தனுஷுக்கு எதிராக பல காரியங்களை செய்துவருகின்றார். இந்நிலையில் தனுஷுக்கு இரண்டு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன. தனுஷை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல்.ராய் தனது தம்பியாக தனுசை பார்க்கின்றார். இதனால் தனுஷை அவர் பார்த்துக் கொள்வார் என கூறப்படுகின்றது.