Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து திருட்டு முயற்சி… கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை…!!

டீக்கடைக்காரர் வீட்டில் திருடிய மர்மநபர்கள் அடுத்தடுத்த வீட்டில் திருட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள மேட்டு தெருவில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரிய தேர்நிலையம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சேகர் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையறிந்த மர்ம நபர்கள் சரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகை, 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து சிகிச்சை முடிந்து சேகர் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைபட்டு இருப்பதையும் நகை திருடு போனதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சேகர் வீட்டில் திருடிய மர்மநபர்கள் அவருடைய அருகில் உள்ள வீடுகளிலும் திருட முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |