கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை கிராமம் அருகே வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக கொடைக்கானல் வனப்பகுதியில் அடுத்தடுத்து தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை கிராமம் அருகே நேற்று முன்தினம் காலையில் திடீரென வனப்பகுதியில் தீப்பிடித்தது. அதில் அங்குள்ள செடிகள், மரங்கள் மற்றும் வனவிலங்குகள் தீயில் கருகி நாசமானது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் வாகன ஓட்டிகள் இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர்.