லண்டனில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 9.30 மணி அளவில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் ஜெரோமே கிரேஸ்ஸ்ன்ட் என்னும் பகுதியில் ஆண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக அதிகாலை 2.15 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Lee Peacock (49) எனும் நபருக்கு இரண்டு கொலைகளிலும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர் Lee Peacock குறித்து யாருக்கேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.