சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கம்பர் சாலை பகுதியில் இருக்கும் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் வேகமாக அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவியதால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.