இந்தியாவில் 43 சதவீத மக்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இந்த ஊரடங்கினால் இதுவரை 43 சதவீத இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக டெக் சுகாதாரத் தளமான GOQii என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான ஊரடங்கு, பதற்றம், வேலை இழப்பு, சுகாதார பயம், குடும்ப பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனை என அடுத்தடுத்து பிரச்சனைகள் சூழ்ந்த வண்ணமே இருப்பதால், இந்த மன அழுத்த நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.